Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அமைச்சர் ரிசாட் பதிதியூனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை புளொட் ஆதரிக்கும் – சித்தார்த்தன் தெரிவிப்பு

அமைச்சர் ரிசாட் பதிதியூனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டால் அத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக புளொட் அமைப்பு அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தனிடம் அமைச்சர் ரிசாட் பதிதியூனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்,

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

அமைச்சர் ரிசாட் பதிதியூனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டால் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும்.

ஆனால் தனிப்பட்ட ரீதியாக அமைச்சர் ரிசாட் பதிதியூனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக நான் வாக்களிப்பேன். ஏனெனில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அமைச்சராக வைத்துக்கொண்டு அவற்றினை விசாரணைக்குட்படுத்த முடியாது.

ரவி கருணாநாயக்கவிற்கும் இவ்வாறு நடந்தது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சித்த போது அவர் அமைச்சுப் பதவியைத் துறந்தார். ரிசாட்டும் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிடுவதுதான் இப்போதைக்கு சிறந்தது – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com