Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளரை விடுவிக்கக் கோரி பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியமூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குஇடம்பெற்றது.

மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும்என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள்வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com