Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாவையால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக் கொடி – இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மட்ட இளைஞரணி நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் குழப்பம் ஏற்பட்டது.

இளைஞரணி நிர்வாகத் தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்திற்கு முன்பாக கூடியிருந்த நிலையில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கட்சியின் கொடி ஏற்றப்பட்ட பின் அது தலைகீழாக காணப்பட்டமை அங்கிருந்த சிலரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொடி இறக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து கொடியை சீர் செய்து கொடுத்திருந்த நிலையில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

மாவை சேனாதிராஜா தனது மகனை இளைஞரணிச் செயலாளராக்க வேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்துவந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை சுமந்திரன் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். இந்நிலையில் மாவை சேனாதிராஜா மகனை செயலாளராக்கும் நிலைப்பாட்டியிருந்து பின்வாங்க நேரிட்டதாக்க கூறப்படுகின்றது.

இந்தக் குழப்பத்தில் மாவை கொடியினை தலைகீழாக ஏற்றியிருக்கலாம் என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com