Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பயங்கரவாத தடைச்சட்டம் சிக்கலானது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.  

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ்  ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறபப்டும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை நீதிமன்றில் நேற்று  விசாரணைக்கு வந்தது. இதன்போது  சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக பயங்கர்வாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில், அவரது சட்டத்தரணி அஜித் பத்திரன சவாலுக்குட்படுத்தியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொன்டிருக்கும் போது நீதிவான் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,  
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தான் குற்றம் சுமத்துவது என யார் தீர்மானிப்பது ?, எவ்வாறு அதனை தீர்மானிப்பது என்பது தொடர்பில் , சட்டத்தில் எந்த வழிகாட்டல்களும் இல்லை. பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணமும் குறிப்பிடப்படவில்லை. பயங்கரவாத தடை சட்டம் விளங்கி கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டுள்ளது. 
முன்னர் தமிழர்களையும் , விடுதலைப்புலிகளையும் இந்த சட்டத்தின் கீழ்  கைது செய்யும் போது , எவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சனையாகவும் இருக்கவில்லை. தற்போது வேறு தரப்பினரை கைது செய்யும் போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றன. என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com