Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மணமகன் வேடமிட்டு பணமோடியிலீடுபட்ட ஆசாமியை மணப்பெண் வேடமிட்டு கைது செய்தது காங்கேசன்துறை பொலிஸ்

மணப்­பெண் தேவை என்று விளம்­ப­ரப்­ப­டுத்தி அதை பார்த்து வரும் பெண்­களை ஏமாற்றி பண மோசடி செய்­தார் என்ற குற்­றச் சாட்­டில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரால் சந்­தே­க­ந­பர் நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

காங்­கே­சன் துறை­யைச் சேர்ந்த பெண் பொலிஸ் அலு­வ­ல­கர் ஒரு­வர் திரு­ம­ணப் பெண்­ணாக பாசாங்கு செய்து குறித்த நபரை கோவி­லுக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­துள்­ளார். இத­னை­ய­டுத்து அங்கு வந்த சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டார்.

மணப் பெண் தேவை என்று பத்­தி­ரி­கை­யில் வந்த விளம்­ப­ரம் ஒன் றைப் பார்த்த பெண் வீட்­டார் அதில் போடப்­பட்ட அலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்பு கொண்டு கதைத்து திரு­ம­ணத்­துக்­கான பேச்­சு­வார்­தை­யில் ஈடு­பட்­ட­னர்.

இந்த நிலை­யில் சீத­னப் பண­மான 9 இலட்­சம் ரூபாவை உடன் தரு­மாறு மண­ம­கன் கேட்­டுள்­ளார். இத­னை­ய­டுத்து அந்­தப் பணத்தை வைப்­பி­லிட்­டுள்­ள­னர் பெண் வீட்­டார். திரு­ம­ணத்­துக்­கும் நாள் பார்க்­கப்­பட்­டது. எனி­னும் மாப்­பிள்­ளை­யு­டன் தொடர்பு கொள்­ள­மு­டி­ய­வில்லை.

அலை­பேசி இலக்­க­மும் செய­லி­ழந்­தி­ருந்­தது, அவ­ரு­டைய வீட்­டுக்­குச் சென்ற போது அங்­கும் அவர் இல்லை.

சந்­தே­கம் கொண்ட பெண் வீட்­டார் காங்கே­சன்­துறைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­த­னர். பொலி­ஸார் விசா­ர­ணை­க­ளில் இறங்­கி­னர். அவ­ரு­டைய அலை­பேசி இலக்­கத்தை வைத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­னர். அவர் தற்­போது பயன்­ப­டுத்­தும் அலை­பேசி இலக்­கத்தை பெற்­றுக் கொண்­ட­னர்.

காங்­கே­சன்­துறை குற்­றத் தடுப்­புப் பிரி­வில் கட­மை­யாற்­றும் பெண் பொலி­ஸா­ரின் உத­வியை நாடி­னர். அவர் மற்­று­மொரு கல்­யா­ணப் பெண்­போன்று பாசாங்கு செய்து அவ­ரு­டன் உரை­யா­டி­னார்.
ஆசை­வார்த்­தை­களை கூறி. பெண் பார்க்க அவரை அழைத்­தார். நேற்­று­முன்­தி­னம் மரு­தடி பிள்­ளை­யார் ஆல­யத்­தில் பெண் பார்க்­கும் பட­லம் இடம்­பெற்­றது.

அங்கு வந்த சந்­தே­க­ந­பரை மறைந்­தி­ருந்த காங்­கே­சன் து­றைப் பொலி­ஸார் கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­க­ளில் அவர் விவா­க­ரத்­துப் பெற்­ற­வர் என்­பது தெரி­ய­வந்­தி­ருக்­கின்­றது என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சந்­தே­க­ந­பர் அரா­லிப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் பொலி­ஸார் கூறு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com