Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

4 மணி நேர மின்வெட்டு ஒரு மாதத்திற்கு நீடிக்கும்

நாட்டில் நேற்று (26) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

” மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கு இம்மாத இறுதிக்குள், மாற்று வழிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி எதிர்வரும் காலத்தில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தகாலம் முடிவடைந்து தற்போது மூடப்பட்டுள்ள மாத்தறை மின்நிலையம் மற்றும் ஏஷியா பவர் ஆகிய மின்நிலையங்களின் ஒப்பந்தகாலத்தை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

பகலில் மூன்றுமணிநேரம், இரவில் ஒருமணிநேரம் என நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com