சற்று முன்
Home / செய்திகள் / நல்லூர் சபை எல்லைக்குள் மருந்தடித்த பழங்களுக்கு தடை

நல்லூர் சபை எல்லைக்குள் மருந்தடித்த பழங்களுக்கு தடை

நல்லுாா் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்கைவக்க ப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீா்மானிக்கப்பட்டி ருக்கின்றது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­விலே சபை உறுப்­பி­னர் கௌசல்யா குறித்த தீர்­மான வரைவை முன்­மொ­ழிந்­தார்.

அவர் தனது தீர்­மான வரை­வில், பொது­மக்­க­ளுக்கு பெரும் நோய்­களை ஏற்­ப­டுத்தி உயிர் ஆபத்தைக் கொண்­டு­வ­ரும் மருந்து விசி­றிய பழங்­களை முற்­றா­கத் தடை செய்ய வேண்­டும் – என்று குறிப்­பிட்­டார்.

இது தொடர்­பில் கருத்து தெரி­வித்த சபை உறுப்­பி­னர் இரா­ச­லிங்­கம், சந்­தை­க­ளி­லும் பழக்கடை ­க­ளி­லும் ஏரா­ள­மான மருந்து விசி­றிய பழங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதனை வாங் கி உட்­கொள்­ப­வர்­கள் பல பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

எனவே இதற்­கென நாம் சிறப்­புச் செய­லணி ஒன்றை பொது­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­ யில் உரு­வாக்கி விரை­வான செயற்­பாட்­டில் இறங்க வேண்­டும் – என்­றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com