Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மன்னார் புதைகுழி அறிக்கை வியாழன் வெளியாகும் ?

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவுசெய்யப்படும் என எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மனித எச்சங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

“மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான காபன் பரிசோதனைக்கு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டது.

ஆய்வறிக்கையை பார்வையிடுவதற்கான இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஆய்வின் முடிவை இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.

எனினும், அறிக்கையின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளைத் தனக்கும், மன்னார் மாவட்ட நீதிவானுக்கும் பொதி சேவையூடாக அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியில் 141ஆவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 315 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், 307 மனித எச்சங்கள் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 26 மனித எச்சங்கள் சிறார்களுடையது என சட்ட மருத்துவ நிபுணர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com