Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வடக்கில் விளம்பர நிறுவனங்களுக்கு இரண்டு வார காலக்கெடு – ஆளுநர் உத்தரவு

வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய நடுத்தர மற்றும் சிறிய பிரச்சார பதாதைகளில் (Banners, Holdings) அவை பிரச்சாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரையிலும் அந்த அனுமதி இலங்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக் கொள்வதற்கு பதாதைகளை காட்சிப்படுத்திய நிறுவனத்தினர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

காட்சிப்படுத்துவதற்கான அனுமதிக்காலம் முடிவடைந்தும் இன்னும் அகற்றப்படாத பிரச்சார பதாதைகளை உரிய தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்வேண்டும் என்பதுடன் அவ்வாறு அகற்றப்படாத, தகவல்களை இணைத்துக் கொள்ளாத பதாதைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஆளுநர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் மாநகரசபைப் பகுதிக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பர பிரச்சாரப் பதாகைகளிற்கான நிதி அறவீடு மற்றும் காலவாதியான விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமை உள்ளிட்ட பல விடயங்களைச் சுட்டிக்காட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாகீசம் கெடந்த வாரம் கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகீசம் முன்னர் வெளியிட்டிருந்த செய்திக் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com