Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மர்ம மரணம் – போதையில் பெனாயில் குடித்தார் என்கிறது பொலிஸ் தரப்பு

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தா் ஒருவா் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். எனினும் நிறைந்த மதுபோதையில் மலசல கூடம் கழுவுவதற்கு பயன்படுத்தும் பெனாயிலை குடித்தே அவர் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பு ஊடாக விடுக்கப்பட்டுள்ள தகவலில் தெரியவருவதாவது,

இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (12) இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளதாகவும் மது அருந்திய பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையின் நிமித்தம் மலசல கூடத்தை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பெனாயிலை குடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை அறிந்த சக பொலிஸார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுக் காலை அனுமதித்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com