Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சத்தியன் அரைச்சதம் – இரண்டாவது ஆட்டத்திலும் வேலணை வேங்கைகள் அபார வெற்றி

சத்தியன் – ஆட்ட நாயகன்

JSL சுற்றுத் தொடரில் மூன்றாவது ஆட்டத்தில் கொக்குவில் ஸ்ரார்சை எதிர்த்தாடிய வேலணை வேங்கைகள் ஐந்து இலக்குகளால் அபார வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் வேலணை வேங்கைகள் அணி சுப்பர் சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வேலணை வேங்கைகள் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுதாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியினர் 19.3 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு அனைத்து இலக்குகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி சார்பாக ஜனுதாஸ் 40 ஓட்டங்களையும் ஜான்சன் 22 ஓட்டங்களையும் ஜெயரூபன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் வேலணை வேங்கைகள் அணி சார்பாக 3 பந்துப்பரிமாற்றங்களில் மதுஷன் 20 ஓட்டங்களை விட்டு கொடுத்து 3 இலக்குகளைச் சாய்த்தார். விதுஷன் 3 பந்துப்பரிமாற்றங்களை வீசி 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை சாய்த்தார்.

148 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய வேலணை வேங்கைகள் அணியினர் 16.3 பந்து பரிமாற்றங்களில் 5 இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். சத்தியன் 53 ஓட்டங்களையும் அணித்தலைவர் மணிவண்ணன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி சார்பாக சுபேந்திரன் 3.3 பந்துப்பரிமாற்றங்களை வீசி 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைச் சாய்த்தார். கிருஷ்ணதீபன் 2 பந்துப்பரிமாற்றங்களை வீசி 20 ஓட்டங்களை கொடுத்து 1 இலக்குகளைச் சாய்த்தார்.

இதன் மூலம் 5 இலக்குகளால் வேலணை வேங்கைகள் அணியினர் வெற்றி பெற்றனர். வேலணை வேங்கைகளுக்கு சிறப்பான வெற்றியினைப் பெற்றுக்கொடுத்த சத்தியன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com