Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சாவகச்சேரி உணவகத்தில் 10 இலட்சம் ரூபா திருட்டு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் மத்தியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பணம் உள்ளிட்ட சில பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள உணவகத்தில் நேற்று நள்ளிரவு திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

உணவகத்துக்குள் ஓடு பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பாதுகாப்புக் கமராவைச் செயலிழக்கச் செய்து விட்டு, வங்கியில் வைப்பிலிடுவதற்காக உணவக உரிமையாளர் வைத்திருந்த 10 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மற்றும் அலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை உணவகத்துக்கு வருகை தந்த உரிமையாளர் சம்பவம் அறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். அங்கு விரைந்துள்ள சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com