Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புளொட் கள்ள மெளனம் ? – சிவாஜி குற்றச்சாட்டு !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நேற்றய மத்திய குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி, புளொட், மற்றுமு் ரெலோ கட்சிகள் பங்குபற்றியிருந்தபோதும் கூட்டம் நடைபெற்ற இரண்டரை மணி நேரத்தில் புளொட்ட அமைப்பு எதுவித கருத்துக்களையும் முன்வைக்காது மௌனம் சாதித்ததாக ரெலோ உறுப்பினரான சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று யாழ் ஊடக அமைத்த்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிடுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்று ஆதரவு வழங்க முடியாது எனத் தெரிவித்த ரெலோ ஐந்து பிரதான நிபந்தனைகள் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்மொழிந்தது. அது தொடர்பில் பேசி முடிவெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியகுழுவைக் கூட்டுமாறும் அழைப்பு விடுத்தது.

இதனடிப்படையில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ரெலோ அமைப்பினால், 5 அம்சக் கோரிக்கைகளை ஆதரவு வழங்கும் தரப்பினருக்கு நிபந்தனையாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அவை

01) மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கபட வேண்டும்,

02) சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்,

03) முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுடைய காணிகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்,

04) பாயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக வாபஸ்பெறப்பட வேண்டும்,

05) வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிக அடிப்படையிலாவது உடனடியாக இணைக்கப்பட வேண்டும்

என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் ரெலோ அமைப்பினால் முன்மொழியப்பட்டது.

இதற்கு ஆதரவாகவும் ஏதிராகவும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வாதப்பிரதிவாதங்கள் செய்தனர். ஆனால் புளொட் அமைப்பு எமது வாதங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கூட்டம் நடைபெற்ற இரண்டரை மணிநேரத்தில் தமது அபிப்பிராயம் என புளொட் அமைப்பினர் எதனையும் கூறியிருக்கவில்லை. இது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றார்.

இதேவேளை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை 5.30 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை­யில் நீடித்த கூட்டத்தில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா.சம்­பந்­தன், மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும், புளொட் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­த­னும், ஆர்.ராக­வ­னும், ரெலோ சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் ந.சிறி­காந்தா, வினோ­நோ­த­ரா­த­லிங்­கம், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கோவிந்­தன் கரு­ணா­க­ரம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com