யாழ்ப்பாணம், வலி.தெற்குப் பிரதேச சபைக்குத் தெரிவான தி.பிரகாசின்உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தால் அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தி.பிரகாஸ், வலி.தெற்குப் பிரதேச சபைக்குத் தெரிவாகியிருந்தார். சபையின் தவிசாளர் தெரிவில், அவர் கட்சி முடிவுகளை மீறிச் செயற்பட்டார் என்று தெரிவித்து அவரைக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவரது சபை உறுப்பினர் பதவியை வெறிதாக்க வேண்டும் என்று தேர்தல்கள் அலுவலகத்துக்கு அறிவித்திருந்தது.
தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு என்று தி.பிரகாஸ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கை மீளப் பெறுவதாக முறைப்பாட்டாளர் பிரகாஸ் மன்றில் தெரிவித்தையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் த.அகிலன், தி.பிரகாசின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக அரசிதழ் அறிவிப்பைச் செய்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அந்த வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினரை நியமனம் செய்யவேண்டும்.
I like the efforts you have put in this, thanks
for all the great posts. https://supermemoryformula.net/