Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மன்னாரில் குழியில் தவறி விழுந்து சிறுவர்கள் இருவர் பலி

மன்னார் தோட்டப் வெளிப் பகுதியில் நேற்றைய தினம் ஓர் குழியினுள் தவறி வீழ்ந்த 8 வயதுச் சிறுவர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அதே இடங்களைச் சேர்ந்த கனகராச் – ரஜித் மற்றும் இன்பயூட் – லிவிசன் ஆகிய சிறிவர்களே குறித்த சம்பவத்தில் பரிதாப கரமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில. கிடுகு நனைய வைத்து பின்னல் வேளையின் பின்பு விற்பனை செய்யும் நோக கில் ஓர் சிறு நீர்த்தேக்கம் உள்ளது. அப்பகுதிக்கு காலை 11 மணியளவில் குறித்த இரு சிறுவர்களும் விளையாடும் நோக்கில் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள எவரும் கான முடியவில்லை.

இதன் பின்னர் வீட்டார் தேடியவேளையில் ஓர் சிறுவனின் உடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதெ. அதனை அடுத்து உறவுகள் தேடுதல் நடாத்தியபோதும் இரண்டாவது சிறுவனும் சடலமாகவே மீட்கப்பட்டான். இதனால் அப் பகுதியே சோகமயமாகவே உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com