Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான சப்பிரகமுவ பல்கலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி

பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று பெலிகுல்ஓயாவில் குளிப்பதற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் மூவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட மூன்று பேரும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் என்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com