Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஈபிடிபி வீணைச் சின்னத்தில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீணைச் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்திருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அதன்போது வீணைச் சின்னத்தில் போட்டியிடுமாறே பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். வீணைச் சின்னத்தில் போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எம்மோடு இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட சில கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவர்களுடன் பேசிவருகின்றோம்.

இந்தத் தேர்தலில் போலித் தேசியம் பேசுகின்ற கட்சிகள் மூன்று அல்லது நான்கு அணிகளாகப் பிரிந்து போட்டியிடவே வாய்ப்பு உள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு அதிகப்படியான இடங்களில் வென்றிருக்கிறோம். எங்கள் தயவின்றி ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது என்றார்.

இதேவேளை ஊடக சந்திப்பில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களிடம் நாங்கள் வீணையில் போட்டியிடுவதா அல்லது வெற்றிலையில் போட்டியிடுவதா சாதகமானது என அபிப்பிராயம் கேட்டிரு்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com