Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முல்லைத்தீவில் கடும் மழை – வெள்ளப்பெருக்கு – குளம் உடைப்பு

கடும் மழை காரணமாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப்பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளம் இன்று காலை உடைப்பெடுத்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டின் மாகாண நீர்ப்பாசன அமைச்சின் நிதி உதவியில் கடந்த 35 வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட குளமே கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த குளத்தில் 13அடி தண்ணீர் கொள்ளளவு செய்யக்கூடியதாக இருந்துள்ளது. இந்நிலையில் கடும்மழை காரணமாக இக்குளத்தில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை அண்டிய விவசாய வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் உடமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் எனினும் தண்ணீர் புகுந்துள்ள ஒரு பகுதியில் வயல் காவலிற்கு இருக்கும் வயோதிப குடும்பம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் முதியவர் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்தவர் என்றும் அறியப்படுவதுடன் தற்சமயம் அக்குடும்பத்திற்கு என்ன ஆனது என்று அறியமுடியவில்லை எனவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குளத்தை அண்டி அருகிலுள்ள கிராமங்களிலுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமரவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நாயாறு கடற்பரப்பின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழைகாரணமாக அதிகரித்துள்ளது எனவே இப்பகுதியை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com