Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

 

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில திட்டமிட்ட குழுக்களினால் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மைக்கு புறம்பான மற்றும் எவ்வித அடிப்படையும் அற்ற இந்த பிரசாரத்தை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக, திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதற்கான சதி முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com