Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தேசாபிமானி விருதுவிழாவில் அரைக் காற்சட்டையுடன் ஆன்மீகத் துறவி

ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒழுங்கமைப்பில் இந்து பௌத்த கலாச்சார மத்திய நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட விருதுவழங்கல் மற்றும் வறிய மக்களிற்கான உதவி வழங்கும் நிகழ்வில் சிவசேனை அமைப்பின் தலைவரான ஆன்மீகத்துறவி மறவன்புலவு சச்சிதானந்தம் அரைக்காற்சட்டையுடன் கலந்துகொண்டமை முகம்சுளிக்க வைத்துள்ளது.

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் இன்று குறித்த சர்வமத அமைப்புக்களின் ஏற்பாட்டில் பலாலியில்வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்விலேயே அரைக்காற்சட்டை மற்றும் ரீசேட்டுடன் சிவசேனை அமைப்பின் தலைவரான ஆன்மீகத்துறவி மறவன்புலவு சச்சிதானந்தம் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு அருகாமையில் நெருக்கமாக அமர்ந்திருந்து நீண்டநேரம் அளவளாவிக்கொண்டிருந்ததை காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com