Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தீபாவளிக் கொண்டாட்டத்தில் யாழில் பல இடங்களில் திருட்டு – தாலிக்கொடி, சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் தீபாவளித் திருநாளிற்காக காலையில் ஆலயங்களிற்குச் சென்ற பலர் தமது தங்க ஆபரணங்களை இழந்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் ஆலயங்களில் அதிக மக்கள் கூட்டம் கூடினர் . இவற்றினை அவதானித்த சில இளைஞர் கூட்டம் தமது கைவரிசயினைக் காட்டியுள்ளனர். இதன்போது கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு சென்று திரும்பிய ஓர் பெண்மணி கால் நடையில் வீடு திரும்பிய சமயம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 தங்கப் பவுண் தாலிக் கொடியினை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு தாலிக்கொடியினை இழந்தவர் குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதேநேரம் திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஓர் பெண்மணியிடம் இளைஞர் ஒருவர் 3 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் ஆலயத்திற்குச் செல்வதற்காக கொக்குவில் பகுதியில் பயணித்த ஓர் மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு 2 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com