Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பாராளுமன்றம் 16 ஆம் திகதி கூடும் – அரசிதழ் வெளியீடு

இம்மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் எதிர்வரும் 14 ம் திகதி (14.11.2018) கூடுமென நேற்று விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு வைபவ ரீதியாக சபை கூடுமென வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரட்னவினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியில், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பந்தி (3) (i) 70 ஆவது சரத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டும் பிரகடனத்தை வெளியிட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்குப் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ள நிலையில், அதனை ஜனநாயக விரோத செயலாக சித்தரிப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றம் இன்று கூட்டப்படும் என முன்னர் கூறப்பட்டது. அதன் பின்னர் ஏழாம் திகதி கூட்டப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இவ்வாறான நிலையிலேயே 16ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதிவெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com