Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா ? கூட்டமைப்பின் முடிவுதான் எனது முடிவு !

அரசியல் கைதிகளை விடுவிக்காது விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவோ புளொட் இயக்கம் சார்பாகவோ வாக்குறுதி வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏனைய 14 உறுப்பினர்களும் வரவுசெலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் தன்னால் எதிர்த்து வாக்களிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஆராயும்பொருட்டு சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சருக்குமிடையிலான அவரச சந்திப்பொன்று இன்று கைதடியிலுள்ள முதலமைச்சர் செலயகத்தில் நடைபெற்றது. அங்கு அனைவரது கோரிக்கைக்கும் அமைவாக அரசியல் கைதிகளை விடுவிக்காது விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் எனக் கோரவுள்ள நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் நீங்கள் வாக்களிக்க மாட்டீர்கள் என்ற உத்தரவாதம் வழங்க முடியுமா என சித்தார்த்தனிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்போது மேலும் குறிப்பிட் அவர்,

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக கதைப்பதற்கு வருமாறே என்னிடம் கூறப்பட்டது. வரவுசெலவுத்திட்டத்தை புறக்கணிக்குமாறு கோர அழைக்கவில்லை. நான் சரியாக சிந்திக்காது முடிவெடுக்க முடியாது. நானும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வேண்டுமானால் அழுத்தம் கொடுக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க முடிவெடுத்தால் நான் எதிர்கின்றேன் எனக் கூறமுடியாது. நான் கட்சிக் கட்டுப்பாட்டுடனேயே வேலை செய்கிறேன். நான் உங்களுக்கு வாக்குறுதி தந்துவிட்டு பின் அதற்கு எதிராக செயற்பட முடியாது. கட்சியாகத்தான் முடிவேடுப்போம் என்றார்.

இதனிடையே கூட்டத்தில் கலந்து கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரன் பதில் ஏதனையும் வழங்கியிருக்கவில்லை. கடந்த வரவு செலவு திட்டத்தின் போது ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவளித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com