சற்று முன்
Home / செய்திகள் / மாகாணக் கல்வி அமைச்சு மதிப்பீடு தரவில்லை – இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு வந்த 35 மில்லியன் ரூபா மீள திரும்பியது

மாகாணக் கல்வி அமைச்சு மதிப்பீடு தரவில்லை – இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு வந்த 35 மில்லியன் ரூபா மீள திரும்பியது

 

கிளிநொச்சி மாவட்டம்  இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 35 மில்லியன் ரூபா பணம் 7ம் மாதம் அனுமதிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் உடனடியாக மாகாண கல்வி அமைச்சிற்கு விபரம்  அனுப்பியும் இன்றுவரை அதற்கான மதிப்பீட்டினை தயாரித்து தராமல் இங்கு காரணம் கூறுகின்றனர் என மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க அரச கரும்மொழிகள் ஒருமைப்பாடு அமைச்சினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டம் தொடர்பான முன்னேற்ற ஆய்வு. இந்த ஆண்டு ஒதுக்கீட்டுப் பணி நிறைவுறுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது தொடர்பிலும் குறித்த அமைச்சின் 2019ற்கான முன்மொழிகள் தொடர்பாகவும் யாழ். மாவட டச் செயலகத்தில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.

போரினால் முழுமையாக அழிவடைந்த ஓர் மாவட்டத்தில் மிகவும் கல்வியில் பின் தங்கிய இடத்தில. மாகாண கல்வி அமைச்சு அக்கறை இன்றி செயல்பட்டது தற்போது தெளிவாகத் தெரிகின்றது. இங்கே மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகங்களும் கூற்றின் பிரகாரம் வேண்டுமென்றே திட்டங்களை தடுத்துள்ளனர். என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. உங்கள் முரண்பாடுகளால் மக்களிற்கு வந்த ஓர் பெரிய திட்டத்தினை திரும்பிச் செல்ல அனுமதிக்க முடியாது.

அவ்வாறு திட்டத்தை நடைமுறைப் படுத்துவதானால்  காசை தம்மிடம் தரட்டாம் எனக் கூறியவர்கள்  தற்போது காலதாமதம் என்கின்றனர். இதனைக்கூற 4 மாதம் எடுத்துள்ளது.  அத்தோடு  ஆளணி பற்றாக்குறை என்பதனை ஒருபோதும் ஏற்கமுடியாது. இது வேதனையான விடயம் .அத்துடன்  கல்வியில் அக்கறையற்ற தன்மை. மிகத் தெளிவாக தெரிகின்றது . இருப்பினும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் வந்த நிதியை திரும்பிச் செல்லவிடாது பயன்படுத்தும் வழி எமக்கும் தெரியும். என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com