மணிவண்ணன் வழக்கு – பொதுவெளியில் விவாதிக்காது நீதிமன்றில் வாதிடுங்கள் என்கிறார் சுமந்திரன்

வழக்கு விடயங்களை நீதிமன்றிலேயே வாதாடுவது வழமை . அவ்வாறு வாதாட முடியாதவர்கள் சட்டத்தரணிகள் மூலம் பொதுவெளியில் வாதாடுவது ஓர் முறையற்ற செயல் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் தொடர்பான வழக்கில் உங்களிற்குச் சாதகமான தீர்ப்பை பெறும் நோக்கிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சார் கட்சித் தலைவர் தெரிவித்திருப்பதோடு அவர்சார்பில் ஆயரான சட்டத்தரணி இது அறம் சார்ந்த செயல் இல்லை எனவும் குறிப்பிடுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில் ,

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஓர் வழக்குத் தொடர்பான விடயங்களை நீதிமன்றிலேயே வாதாடுவது வழமையான செயல் அவர் அவ்வாறு வாதாட முடியாதுவிடின் தமது ஜனாதிபதி சட்டத்தரணி மூலம் வாதாடமுடியும். ஆனால் வழக்கு இடம்பெறும் காலத்தில் பொதுவெளியில் வாதாடுவது ஓர் முறையற்ற செயல் . இதே நேரம் அவரது தலைவர் கூறுவதான விடயத்தினை அவர் சார் சட்டத்தரணிகள் கூட தமது ஆட்சேபனையில் குறிப்பிடவில்லை. என்பதும் இங்கே ஓர் முக்கிய விடயமாகவுள்ளது.

அதேநேரம் இரண்டாம் சட்டத்தரணியின் கூற்றுத் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கில் பொதுவெளியில் கருத்துரைப்பது தொழில் தர்மத்திற்கு விரோதமானது. எனவே அவர் செய்யும் தவறை நான் செய்ய மாட்டேன். எனப் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com