Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்கலாம் – அஸ்மின் சொன்ன ஆலோசனை

அமைச்சரவைப் பிரச்சனையைத் தீர்க்க முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதைத் தாண்டி உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆளுநருக்கு ஆலோசனை கூற முற்படுகிறார் எனவே நாம் அனைவரும் இணைந்து மாகாணசபையின் முதல்வராக சிவாஜிலிங்கத்தை நியமித்தால் அவர் இந்த அமைச்சர்கள் விவகாரத்தை இலகுவாக தீர்த்துவைப்பார் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கத்திற்கும் அஸ்மினுக்குமிடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அமைச்சர்கள் பிரச்சனையைத் தீர்க்க முதலமைச்சருக்குப் பதிலாக தான் ஆளுநருக்கு ஆலோசனைக் கடிதம் எழுதப்போவதாகக் கூறிய சிவாஜிலிங்கம் அஸ்மின் நல்லாட்சிக்கான முன்னணியால் துக்கி எறியப்பட்டவர் என்றும் தேசியப் பட்டியில் உறுப்பினர் என்றும் அஸ்மினைச் சீண்டிவிட்டார்.

இதனால் கோபமடைந்த அஸ்மின் சிவாஜிலிங்கம் பொய்கள் உரைப்பவர் என்று கூறியதோடு நாம் எல்லோரும் இணைந்து சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்கிவிடுவோம் அவர் அமைச்சர்கள் பிரச்சனையைத் தீர்த்துவைத்து இந்த மாகாணசபையை திறம்பட நடத்துவார் என கூறினார்.

தொடர்ந்து குறிப்பிட்ட அஸ்மின் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் விவகாரத்தை ஒரு கடிதத்தில் முடிக்க வேண்டிய முதலமைச்சர் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com