சற்று முன்
Home / செய்திகள் / செம்மணியில் மீண்டும் மனிதப் புதைகுழி – இந்திய நிறுவன உதவியுடன் மூடிமறைக்க பொலிசார் முயற்சி

செம்மணியில் மீண்டும் மனிதப் புதைகுழி – இந்திய நிறுவன உதவியுடன் மூடிமறைக்க பொலிசார் முயற்சி

யாழ்ப்பாணம் செம்மணி – நாயன்மார் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே நேற்று மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இருப்பினும் இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர்விநியோகத்தின் நிலக்கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செம்மணி – நாயன்மார் கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர் தாங்கி நிர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தகாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாரிய அளவில் நடைபெற்றுவரும் இப் பணிகளின் போது நேற்று இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியினை சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் போது அங்கு சுமார் 3 அடி மண்ணை அகழ்ந்த போது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இனங்காணப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொருளியலாலருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் அழைத்திருந்தார்.

அங்குவந்த பொலிஸாரும், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினைச் சேர்ந்தவர்களும் மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் அப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னரே குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த நீலக்கீழ் நீர் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com