பெருநாள் பரிசு குறும் திரைப்படம் வெளியீடு

தென்கிழக்கு கலை கலாசார அமையத்தின் தயாரிப்பில் உள்ளூர் கலைஞர்களின் நடிப்பில் ” பெருநாள் பரிசு ” எனும் குறும் திரைப்படம் சாய்ந்தமருது கமு/ றியாளுள் ஜன்னா வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (6) வெளியிடப்பட உள்ளது.

13 கதா பாத்திரங்களுடன் 30 நிமிடம்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இத் திரைப்படம் அன்றய தினம் பிற்பகல் 4.30 தொடக்கம் இரவு 10.30 மணிவரை காட்சிப்படுத்த உள்ளதாக
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்கிழக்கு கலை கலாசார அமையத்தின் ஆறாவது வெளியீடாக வெளியிடப்படவுள்ள இக் குறும் திரைப்படத்தை எ. சாஹிர் கமரா மற்றும் எடிட்டிங் செய்துள்ளதுடன் எம்.எச்.எம் ஹிஜாப் எழுத்து மற்றும் இயக்கியும் உள்ளனர். இக் குறும் திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களை அஸ்வான், சுல்பிகா, சர்மில், சாஹிர், ரிஸான், சாகிர் கரீம், றினோஸ், புஹாரி, நபார், ரஸ்மிர், புகார்த்தீன், அனாபா மற்றும் அம்ரினா ஆகியோர் ஏற்றும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் நுழைவுச்சீட்டை பெறுவதற்கும் மற்றும் தொடர்புகளுக்கும்  0769854566, 0769131443, 0775824558 எனும் இலக்கங்களுக்கு அழைக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com