ஒரே பாடலில் நடிகர்களைக் கலாய்த்த தமிழ்ப் படம் 2

தமிழ்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சிவா – அமுதன் கூட்டணியே இணைந்துள்ளனர். சிவா உடன் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார்.

முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் தமிழ் சினிமாவின் தற்போதைய டிரண்ட் மற்றும் தற்போதைய அரசியல் சூழலை கலாயத்து படமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசருக்கு ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து நான் யாருமில்ல என்ற சிங்கிள் வீடியோ பாடல் நேற்று வெளியானது. ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன் என ஒருவரை கூட விட்டு வைக்காமல் இந்தப்பாடல் கலாய்க்கப்பட்டுள்ளது.

“சுனாமியின் பினாமியே…, பருப்புடா…, பீட்டா வந்தா எனக்கென்னா, மீத்தேன் வந்தா எனக்கென்னா…, வரலாம் வரலாம் வா…., இது தானா சேர்ந்த கூட்டமில்ல… ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்…, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது… என் உயிர் மூச்சு சங்கம்டா மண்டபம் கட்டிட்டு தான் கல்யாணம் டா…. இதுபோன்ற பல கலாய்ப்பு வார்த்தைகள் இந்தப்பாடலில் இடம் பெற்றுள்ளன.

ரசிகர்களிடத்தில் இந்தப்பாடலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. வெளியான 24மணிநேரத்தில் 15.80 லட்சத்திற்கும் அதிகமானபேர் பார்த்துள்ளனர்.

தமிழ்படம் 2 படத்தின் அனைத்து பாடல்களும் ஜூன் 29-ம் தேதி ரிலீஸாகிறது. இசை வெளியீட்டு அறிவிப்பை கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இசை உங்களை நோக்கி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com