Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நடிகர் சங்கத்தில் திலீப் சேர்ப்பு : 4 நடிகைகள் விலகல்

கடந்தாண்டு நடிகை விவகாரத்தில் சிக்கி கைதான மலையாள நடிகர் திலீப், தற்போது ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். திலீப் கைது செய்யப்பட்டபோது, மலையாள நடிகர் சங்கமான அம்மா-விலிருந்து திலீப் நீக்கப்பட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக அம்மா சங்க தலைவராக இன்னொசென்ட் பொறுப்பு வகித்தார். வயது காரணமாக தான் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து மோகன்லால் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் சங்க பொதுக்குழுவில் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானமும் நிறைவேறி இருக்கிறது. இதற்கு பெரும்பாலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், சினிமா பெண்கள் நல அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தச்சூழலில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் அம்மா சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com