புலிச் சீருடை, கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின்  சீருடை புலிக்கொடி, மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய இருவரில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது தொடரும் வாய்ப்புக்கள் இருக்கிறது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் “கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தமக்கு என்ன நோக்கம் எனத் தெரியாது அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிஓடியவருக்குதான் கிளைமோர் உள்ளிட்டவை தொடர்பான தகவல் தெரியும் என அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com