புலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து இருபது கிலோ கிளைமோர் குண்டு கைக்குண்டு ஒன்று றிமோட் கொன்ரோல் நான்கு T56 துப்பாகி தோட்டாக்கள்- 98, விடுதலைப்புலிகளின் சீருடை – 2, சுமார் 45 வரையான விடுதலைப்புலிகளின் புலிக்கொடி என்பவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில், கைதானவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தப்பி ஓடிய இருவர்களில் ஒருவர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது.

இன்று காலை வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சந்தேகத்தின் பெயரில் போக்குவரத்து பொலிசாரினால் சோதனை செய்த போதே இக் கிளைமோர் குண்டு மற்றும் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளன இருப்பினும் விசாரணைகள் நடப்பதனால் எதனையும் கூறமுடியாது என ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தப்பி ஓடியவர்களை பிடிக்க விசேட அதிரடிப்படை ஒரு குழுவை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு, கிளிநொச்சி பொலிசாரும் ; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com