அரச பேருந்துககளில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு

அம்பாறை கல்முனை சாலையூடாகப் பயணிக்கும் வெளிமாவட்ட அரச பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை எனப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனையிலிருந்து அம்பாறை பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் அம்பாறை பகுதிகளிலிருந்து கல்முனைக்கு செல்லும் பயணிகளுக்கே மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

கல்முனையிலிருந்து – அம்பாறைக்கு பயணிப்பதற்கு 62 ரூபாவே தற்போது பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பயணிகளிடம் 70 ரூபா நடத்துனரால் வலுக்கட்டாயமாக வாங்கப்படுகிறது.மிகுதிப்பணம் டிக்கட் சிட்டின் பின்னால் தருவதாக எழுதப்பட்டு பின்னர் அது மறக்கடிக்கப்படுகிறது.மிகுதியை கேட்டவர்களுக்கு ஏச்சுக்கள் தான் பதிலாகவும் கிடைக்கின்றது.

சில வேளைகளில் 65 ரூபாவும் வாங்கப்பட்டு மிகுதிப் பணம் கொடுக்கப்படுவதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகளும் தாயும் கல்முனையில் இருந்து அம்பாறைக்கு செல்லும் போது பஸ் நடத்துநர் இருவருக்கு ரிக்கட் காசு ரூபா 130 பெற்றுவிட்டு மிகுதி 6 ரூபாயை வழங்காமல் விட்டதுடன் மிகுதியை கேட்டதற்காக சண்டையும் பிடித்துள்ளார்.
இதற்கு தாயும் மகளும் இப்பிடி எடுப்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து திரியலாம் என பஸ் நடத்துநரை தூற்றி சென்றதை காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com