இந்துக்களை கொச்சைப்படுத்த வேண்டாம் – வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்

இந்து கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சராக முஸ்லீம் இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமையானது இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடு என வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்து கலாச்சாரா அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சராக ஒர் முஸ்லீம் இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இச் செயற்பாடானது இந்து மதத்வரது புனிதத் தன்மையை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகும்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளுகின்ற இவ் அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய விடயங்களை மறந்து அல்லது அதில் இன்னமும் நல்லிணகத்தை ஏற்படுத்தாது தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி இவ் பிரதியமைச்சு விவகாரத்தை மீள் பரிசிலனை செய்து இந்து மதத்தவர் ஒருவரை நிமயிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com