அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சராக நியமனம்

விவசாய பிரதி அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த பதவிப்பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர்.

அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சாபாநாயகர் பதவி வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தபோதிலும் அரசின் பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு கடும் எதிப்பினை வெளியிட்டிருந்ததால் அங்கஜனுக்கான அந்த வாய்ப்பு கைநழுவியிருந்தது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதியினால் விவசாய பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com