Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காதர் மஸ்தானுக்கு இந்துகலாசார அலுவல்கள் பிரதி அமைச்சு !!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இந்துகலாசார அலுவல்கள் மற்றும் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இன்று (12) நியமிக்கப்பட்டார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிரதி அமைச்சர் பதவியையும் மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கிவைத்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே காதர் மஸ்தானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com