பாவப்பட்ட பணம் – சி.வியும் சி.வி.கேயும் வாங்க மறுப்பு – தவராசா ஓடி ஒளிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடைய ணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறிய எதிர்கட்சி தலைவர்,

தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார். ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்ய ப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனை கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவை தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ள மாட்டோம்.

ஆகவே நீங்கள் எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தவராசா இன்றைய சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாது நழுவிக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை தவராசாவின் வங்கிக் கணக்கிற்கும் பாவப்பட்ட பணம் எனக்கூறி இளைஞர்கள் சிலர் சிறிய சிறிய தொகைகளாக பணத்தினை வைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com