Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வவு.வடக்கில் தென்னை பப்பாசி பயிர்ச்செய்கை யானைகளால் அழிப்பு – நடவடிக்கை இல்லை என விவசாயிகள் விசனம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் போரிற்குப் பின்னர் புதிதாக நாட்டப்பட்ட 400 தென்னைகளும் 850ற்கும் மேற்பட்ட பப்பாசிகளை யானைகள் அழித்துள்ள நிலையிலும் இதனை தடுக்க எவருமே உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என நெடுங்கேணி கமக்கார அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

யத்தத்திற்குப் பின்னர் காட்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எமது விவசாயிகள் புதிதாக சேனைப்பயிர் செய்வதுபோன்று காடுவெட்டி பொட்டில் அமைத்து அங்கு தங்கியே விவசாயச் செய்கையிலும் ஈடுபடத் தொடங்கினோம். இதற்காக அரசு , பொது அமைப்புக்கள் ஒரு சில உதவிகளையும் புரிந்தனர் . இருப்பினும் அதிகம் ஒவ்வொரு விவசாயின் முதலீடாகவும் மனைவி, பிள்ளைகளின் நகைகளை அடைவு வைத்தும் , வங்கிகள் அமைப்புக்களிடம் கடன் பெற்றுமே பயிர்ச் செய்கையில் இன்றுவரை ஈடுபடுகின்றோம்.

இந்த நிலையில் தற்போது உடனடிப்பயிரை மேற்கொள்ளும் அதேநேரம் எதிர்கால நன்மை கருதி அதிகளவில் தென்னைச் செய்கையை மேற்கொள்ள எண்ணிப் பலரும் தெங்குச் செய்கையிலும் அதிக கோரல் உள்ள பப்பாசிச் செய்கையிலும் ஈடுபட்டனர். இருப்பினும் எமது பிரதேசத்தின் மிகப்பெரும் பிரச்சணையான யாணைப் பிரச்சணைக்கு இன்றுவரை தீர்வு எட்டப்படவில்லை.  இதனால் விவசாயிகள் பல தடவைகள் பாரிய அழிவைச் சந்தித்து விட்டனர்.

இவ்வாறு யாணைகளால் மட்டும் மீள்குடியேற்றத்திற்குப் பின்பு 400ற்கும் மேற்பட்ட தெண்ணைகளும் 850ற்கும் மேற்பட்ட பப்பாசிகளும் முழுமையாக அழித்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும் ஏனைய சொத்துக்கள் பயிர்களும் அழிக்கப்படுகின்றன. இவை தொடர.பில் பிரதேச செயலகம் , மாவட்டச்செயலகம் , வன ஜீவராசித் திணைக்களம் என அணைத்திலும் ஒன்றிற்குப் பத்து தடவை முறைப்பாடும் செய்யப்பட்டது. எதற்குமே பலன் கிட்டவில்லை.

இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக வாழும் எமக்கே இந்த நிலமை ஆனால் 2010ல் புடியேற்றப்பட்ட பொபஸ்வேவா மக்களிற்கு அத்தனை கிராமங்களையும் அதனோடு வாழ.வாதார நிலங்களையும் சுற்றி யாணைப் பாதுகாப்பு வேலிகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாணைப் பாதுகாப்பில்கூட தமிழன் , சிங்களவர் என்ற பாகுபாடு பார்க்கப்படுகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.

இவ்வாறான காரணங்களால் பிரதேச செயலகம் , வன ஜீவராசித் திணைக்களம் , மாவட்டச் செயலகங்களை முற்றாக முடக்கி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள 2017ம் ஆண்டின் ஆரம்பத்தில் விவசாயிகளாகிய நாம் முற்பட்டவேளையில் குறித்த சம்பவத்தினை அறிந்த பிரதேச செயலாளர் உரிய ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறிய உறுதிமொழியினால் அம் முயற்சி கைவிடப்பட்டது. இதனால் அம் முயற்சியை மீண்டும் தொடர்வதனைத் தவிர மாற்றுவழி இருப்பதாக எமக்குப் புலப்படவில்லை. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com