25 அடி பள்ளத்தில் பாய்ந்தது வாகனம் – மூன்று பேர் படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் 04.06.2018 அன்று மாலை 4.00 மணியளவில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியள்ளது. விபத்தில் வேன் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் வீதி வழுக்கியதால் சாரதி, வேனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com