அஜித்துடன் நடிக்கக் காத்திருக்கும் கீர்த்தி சுரேஸ்

அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநடி) அனைத்து ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்திருப்பதால் அவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று (மே 31) சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.

அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது.

இருப்பினும் அவரைக் காண ரசிகர்கள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிகழ்வில் ஏவிஆர் நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் விளம்பரப் படம் திரையிடப்பட்டது. பின்னர் ரசிகர்களை சந்தித்துப் பேசினார் கீர்த்தி.

அப்போது தளபதிகூட நடித்துவிட்டீர்கள், எப்போது தல உடன் நடிக்க உள்ளீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி, “விரைவில் அந்த வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com