சுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்

சுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு இதற்கான சம்பிரதாயபூர்வ நிகழ்வு இடம்பெற்றது.

வெண்கரம் நிறுவனம் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றி, அந்தக் கிராமங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கல்விச் செயற்பாட்டை முதன்மையாகக் கொண்டு சமூகநலச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

பொன்னாலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படிப்பகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்;ச்சியாக பாண்டவெட்டை மற்றும் காட்டுப்புலத்தில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி அங்குள்ள கிராமமட்ட அமைப்புக்கள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களின் அனுசரணையுடன் வெண்கரம் படிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அளுள்தீபம் சனசமூக நிலையத் தலைவர் எஸ்.ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழவில், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சி.இதயகுமாரன், செ.கிருஸ்ணா, வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வலிகாமம் கல்வி வலய தமிழ்பாட ஆசிரிய ஆலோசகரும் வெண்கரம் ஆலோசகருமான திருமதி ச.சுகுணா, காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர் எஸ்.சிவானந்தராசா, கிராம சேவையாளர் ஜீவராசா மற்றும் கல்வியியலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com