இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாடு இதே நாளில் நடைபெற்றது

இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாடு கடந்த 11.05.2016 அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் இதே நாளில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு உட்பட ஈழத்தமிழர்களின் நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு கருத்துப் பகிர்வுகளும், ஆய்வுரைகளும் இம் மாநாட்டில் நிகழ்த்தப்பட்டன.

இதில் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய fshfpa Michael Aastrup Jensen, Nikolaj Villumsen, Mogens Jensen, Christian Juel மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் Francis Harrison, தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (மு.பா.உறுப்பினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கத்தோலிக்க பாதிரியார் எழில் ராஜேந்திரம் (தமிழ் சிவில் சமூகம்) மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் பொன். மகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com