தேங்காய் விக்கிற விலையில இவைக்கு ……….. ஏதோ கேக்குதாமுங்கோ – (சவாரி 47)

வணக்கமுங்கோ,

கம்பசுச் செய்தி ஒண்டோ வாறன் எண்டு போன என்ன நாலைஞ்சு மாதமா வெளியில தலை காட்ட முடியாமல் பண்ணிட்டாங்களுங்கோ. இலெச்சன் நேரம் மனுசன் ஏதாவது வில்லண்டமா எழுதி தங்டகண்ட தலை உறுண்டுமெண்டு பயந்திருப்பாங்களோ என்னவோ. இலெச்சன் முடியுற வரை நோ பேயில வீட்ட அனுப்பிட்டாங்களுங்கோ. அதுதான் உங்களக் கொஞ்சநாயக் காண முடியேல்ல.

சரி கம்பசுக் கதையோட வாறன் எண்டுட்டு போனனான். நாலஞ்சு மாதமாப் போயிட்டுத்தான சனம் மறந்திருக்கும் எண்டு விட்டுடாம ஏதும் சங்கதி கிடக்கு மோ என நேர கம்பசுக்குத்தான் போட்டு வாறனுங்கோ. பிறகு எங்களின்ர சனத்திட்ட தப்பேலாதுங்கோ.

15 இக்குள்ள கிடைக்கும் 16 இக்குள்ள கிடைக்கும் 17 தீபாவளிக்குள்ள கிடைக்கும் எண்டு சனத்தப் பேக்காட்ட பெப்ரவரி 10 இல எல்லாத்துக்கும் சேத்து சனம் நல்ல குத்துக் குத்தினதுகளுங்கோ. நான் சொல்லிட்டுப் போனத மட்டும் நாலஞ்சு மாதத்தில எப்படியுங்கோ சனம் மறந்திருக்கும்.

அதுதானுங்கோ கம்பசுப் பக்கம் போனனான். கம்பசு வாசலுக்க போகவே பெடியன் ஒண்டு சொல்லிச்சு “தேங்காய் விக்கிற விலையில உவங்களுக்கு வேற வேலையில்ல எண்டு. என்னடா தம்பி சொல்வுலுற என்ன நடந்தது எண்டு கேட்டனுங்கோ.

12 மணிக்கு பரமேஸ்வரன் கோயில்ல ஊழியர் சங்கப் பெடியள் 108 தேங்காய் உடைக்கப் போறாங்களாம். தங்களுக்கு சம்பளம் கூட்டவேண்டும் எண்டு.
“என்னடாப்பா சொல்லுறா சம்பளம் கூட்டுறத்துக்கும் தேங்கா உடைக்கிறத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டுட்டு நேரத்தப் பாத்தனுங்கோ. தேங்காய் உடைபட அஞ்சு நிமிசந்தானுங்கோ கிடந்தது.

ஓடிப்போய் அவர் வந்திருக்கிறாரோ எண்டு தேடிப்பாத்தனுங்கோ. மனுசனக் காணேல்ல. ஆனா தேங்காயள் அடுக்கிக் கிடந்ததுங்கோ. சுற்றும் முற்றும் பாத்திட்டு அங்க நிண்ட ஓராளக் கூப்பிட்டு “தம்பி தேங்காய் உடைப்புக்கு சிவாஜிலிங்கம் வாறாரோ” எண்டு கேட்டனுங்கோ.

அந்தாள் ஏன் இங்க வரப்போகுது. நேற்று மாகணசபையில கத்தின களைப்பு நீங்காம எங்கயன் படுத்திருக்கும் போய்ப் பாரும் எண்டு வந்ததுங்கோ எதிர்க் கருத்து.
என்னத்தச் சொல்லிப்போட்டன் எண்டு கோவிக்கிறீர். தேங்காய் உடைக்கிறதெண்டால் அந்தாள் வந்தால் தானே விசேசம். கிலாரிக்கெல்லாம் தேங்காய் உடைச்சது அந்த மனுசன்தான. எண்டனுங்கோ.

நீர் நக்கல் விடாம அங்கால விலத்தும் பெடியள் வாறாங்கள் தேங்காய் உடைக்கேக்க மண்டயில பட்டுடப்போகுது. பிறகு நாங்கள் கோட்டுக் கேசண்டு அலையேலாது. என மீண்டும் அந்தக் குரல் பலமாய் என் காதுக்குள் ஒலித்தது.

தள்ளி நிண்டு வேடிக்கை பார்த்தனுங்கோ. ஒரு பத்துப் பன்னிணரடு பெடியள் வந்து ஆண்டவா…. பரமேஸ்வரா…. கொடும்பாவி எரிசம் ஒருத்தரும் கண்டுக்கல…. இப்ப உனக்கு தேங்காய் உடைக்கிறம் நீயாவது எங்கண்ட சம்பளத்த கூட்டுறத்தக்கு வழி பண்ணப்பா எண்டு போட்டு மள மள எண்டு தேங்காயள எடுத்து உடைச்சாங்களுங்கோ.

நான் நல்லூரானே உவங்கள நீதான் காப்பாத்தோணும் எண்டுட்டு அங்க இருந்து கிளம்பினனுங்கோ. ஓராள் வைரவி எண்டு பலமாக் கூப்பிட்டுச்சு. அட எங்கண்ட பரமசிவமண்ண. என்ன பரமர் இஞ்சால எண்டனுங்கோ. நீ உவங்களக் காப்பாத்த நல்லூரான கூப்பிடுறா. நல்லூரானைக் காப்பாத்தவே வளி தேடேணும் போல கிடக்குது நிலமை எதுக்கும் யாழ்பணம் மாநகரசபைப்பக்கம் போட்டுவா எல்லாம் விளங்கும் எண்டவருங்கோ.

எனக்கு ஒண்டும் விளங்கேல்லயுங்கோ. நல்லூரான் – மாநரகரசபை என்னவா இருக்கும்…….!!!

அப்ப நான் போட்டு வாறனுங்கோ

– வண்டில்காற வைரவி அப்பு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com