Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

என்னை விசாரணைக்கு அழைத்தவர்கள் ஏன் சிவாஜிலிங்கத்தை அழைக்கவில்லை! – பீரிஸ்

வடக்கில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட பின்னர் அது பற்றி பேசிய தன்னை இரகசியப் பொலிஸூக்கு அழைத்ததாகவும் எனினும் இது பற்றி பேசிய சிவாஜிலிங்கத்தை அவ்வாறு அழைக்கவில்லை எனவும்  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் 06.04.2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்ட பீரிஸ், தற்போது நடைபெற்று வருவது தேசிய அரசாங்கம் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே எனவும் பிரதமர் தனக்கு தேவையான விதத்தில் அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்கி தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் அதற்கு 1ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்ப்பு வௌியிடுவதில்லை எனவும் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com