பட்டதாரி சங்க பிரதிநிதிகள் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு

பட்டதாரிகள் நேற்று (24) பிரதமரின் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதில் வடக்கு, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர்களுடன் ஏனைய மாகாணங்களின் தலைவர்களும் உறுப்பினர்களுமாக பதினொரு பேர் கலந்து கொண்டனர். அதன்போது தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அதற்கு அவர்கள் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டனர். இதன்போது பட்டதாரிகளினால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
35 வயதெல்லையை 45ஆக உயர்த்த வேண்டும்.
நுண்கலை பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கான ஆசிரியர் தொழிலை வழங்க அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் வாதிகள் தரும் பெயர் பட்டியல்களை நிராகரிக்க வேண்டும்.
பட்டதாரிகளுக்கு வருடம் தோறும் தொழில் நியமனங்களை வழங்குவதற்கான தேசிய கொள்கை மற்றும் தொழில் வழங்களை உருவாக்கி வேலை இன்மை பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக 20000 பட்டதாரிகளை உள்ளீர்ப்பதாக கூறினார்கள்.தொழில் வெற்றிடங்கள் 60000 உள்ளது எனவே மீதமுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் போது எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் எங்களது கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடுவோம்.
இதிலே தொழில் நியமனம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றியும் என்ன அடிப்படையில் உள்ளீர்ப்புச் செய்யப்படும் என்பது தொடர்பான செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும். – என்றுள்ளது.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com