அல்வாயில் யுவதி கடத்தல்

வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாயாரைத் தாக்கிக் காயப்படுத்திவிட்டு மகளைக் (வயது 19) கடத்திச் சென்றுள்ளனர். அல்வாய்ப்பகுதியில் இன்று காலை 08.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆட்டோ ஒன்றில் வாள்களுடன் வந்திறங்கியதாகக் கூறப்படும் ஆறு நபர்களே இக் கடத்தலில் ஈடுபட்டதாக பெற்றோரால் பருத்தித்துறைப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பருத்தித்துறைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

One comment

  1. Great..He shd tell them that due to bad news in the past,it was not possible !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com