சற்று முன்
Home / கட்டுரைகள் (page 9)

கட்டுரைகள்

சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?- நிலாந்தன்

அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் ...

Read More »

யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் – பாகம் 2

பண்பாடும் பெண்களும். யாழ்ப்பாணத்து அரங்கில் பெண் பிரசன்னம் என்பதற்கு முதலில் பண்பாட்டுத்தளத்தினைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானது. “பண்பாடு என்பது மனித இனத்தின் வாழ்வியல் முறை” ஆகும். இதற்குள் மதம், உணவு, சூழல், மனித உறவு முறைகள், கலைகள், போக்குவரத்து, பணம் போன்ற இன்னோ ரன்ன பிறவிடயங்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இவ்விடயம் உயிரியல், சூழல், வரலாற்று அம்சங்கள் ...

Read More »

வவுனியாவில் அமையப்போகும் புதிய பொருளாதார வலயமும் வடபகுதிக்கான மீன்பிடித்துறைமுகமும் பற்றிய ஒரு பார்வை பேராசிரியர் – பசுபதி சிவநாதன்

இலங்கை அரசாங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன் மொழிவுகளில் வடமாகாணத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்றவகையில் குறிப்பிடப்பட்டவற்றில் முக்கியமானதொன்றாக இருப்பது 1. வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை நிறுவுவதற்கு 200 மில்லியன் செலவிட மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. 2. காரைநகரிலும் வல்வெட்டித்துறையிலும் மீன்பிடித்துறைமுகங்ளை கட்டிஎழுப்புதல் இவ்இரண்டு திட்டங்களும் பிரதேசஅபிவிருத்திச் செயற்பாட்டின் ஒருகூறாகக் கௌ்ளமுடியும். ...

Read More »

யாழ்ப்பாணம்தான் வாள்ப்பாணம் இல்லை? – நிலாந்தன்

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்”; எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில்,அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் ...

Read More »

சுட்டுக்கொல்லும்முன் ஒரு கணம் யோசிக்கவில்லையே !

அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுதான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி  அனுப்பியிருந்தேன். முகநூலில் 17 வது பிறந்த நாள் என்பதால் ஹரம்பியின் அழகான படத்தைப் போட்டு ஒரு லைக் போடுங்கள் என்று முகநூலில் பதிவு செய்திருந்தார்கள்.  ...

Read More »

தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! – புருசோத்தமன் தங்கமயில்

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும், அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் ...

Read More »

சிறிசேன யாப்பும் இறுதியானதில்லையா? – நிலாந்தன்

வரலாறுதான் மு.திருநாவுக்கரசுவின் அடிப்படை அறிவியல் ஒழுக்கம் ஆகும். அவர் அடிக்கடி கூறுவர் “வரலாற்றில் இருந்தே அறிவியல் தொடங்குகிறது. அது தத்துவத்தில் முழுமை அடைகிறது” என்று. இவ்வாறு எல்லாவற்றையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்ப்பதே அவருடைய தனிச்சிறப்பாகும். இதனாலேயே அவர் அவருடைய சமகாலத்து தமிழ் அறிஞர்கள் பலரிடமிருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார். இலங்கைத் தீவின் யாப்பு உருவாக்கப் போக்குகளையும் ...

Read More »

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்;” – முன்னுரையும் அறிமுகமும்

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண்கலைஞர்கள்;” வரலாற்றுப்பதிவின் மறுபக்கம் ஆசிரியர் – மார்க்கண்டு அருள்சந்திரன். M.A மாவட்ட கலாசார உத்தியோகத்தர், கிளிநொச்சி. வெளியீடு – பத்தினியம்மா நிதியம், தெல்லிப்பளை. முன்னுரை பெண் கலைஞர்களின் ஆற்றுகை பதியப்படல் வேண்டும் “யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர் கள்” என்ற அரங்கியல் சார்நூலின் ஊடாக வரலாற்றுப் பதிவில் மறைக்கப்பட்டிருந்த பெண்கலைஞர்களது ...

Read More »

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்!

இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ...

Read More »

நினைவு கூர்தல் – 2016 நிலாந்தன்

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாணசபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com