சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 319)

முக்கிய செய்திகள்

ஹபாயா விடயத்தில் முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ள முயன்றால் தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – அஸ்மின் ஆவேசம்

ஹபாயா விடயத்தில் முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ள முயன்றால் தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார். ஹபாயா விடயம் தொடர்பில் விஷேட ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணியக்கூடாது என இந்துக்கல்லூரி சமூகம் கேட்டுக்கொண்டதும், பின்னர் ...

Read More »

45 இலட்சம் பண மோசடி – தபாலதிபருக்கு யாழ் மன்று விளக்கமறியல் உத்தரவு

45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தபாலதிபரை வரும் 16ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று (2) உத்தரவிட்டது. அனுராதபுரம் பகுதியில் தபாலதிபராக கடமையாற்றும் சந்தேகநபர், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அவரை ஏமாற்றியதாக ...

Read More »

திருகோணமலை காட்டுக்குள் புலிச் சிருடையும் ஆயுதங்களும் மீட்பு

திருகோணமலை, கோமரங்கடவெல காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவித்தனர். காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான ...

Read More »

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என்று பெரும்பான்மையான கிழக்கு தமிழர்கள் விரைவில் கோருவார்கள்

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்  என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , ...

Read More »

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎இன்று 01-05-2018 செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர் சங்க ...

Read More »

பேரினவாத கட்சிகளுடன் இணைந்த தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டுள்ளது

உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமா் பொன்னம்பலம் உள்ளூராட்சித் தேர்தலில் தமது வாக்குவங்கியை சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளால் இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருந்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அது எங்களுடைய ...

Read More »

தமிழ் தேசிய விடுதலையையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் வென்றெடுப்போம்! – மேதின பிரகடனம்

தமிழ் தேசிய விடுதலையையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் வென்றெடுப்போம்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே தின பிரகடனம் 2018 ………………………………………. உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும் தினமாகவே மேதினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் வேலை நேரக் குறைப்பு, ஊதிய அதிகரிப்பு, சங்கம் வைக்கும் உரிமை ...

Read More »

பிரதி, இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நாளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (01.05.2018) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய 18 புதிய அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நாளை (02) காலை 10.30க்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக, ஜனாதபதி செயலகம் அறிவித்துள்ளது.

Read More »

பிள்ளைகளுக்கு விஷம் ஊட்டிய தந்தை – சாவகச்சேரியில் கொடூரம்

இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, 37 வயதுடைய தந்தை நேற்றிரவு ...

Read More »

ஆசிரியை மீதான வாள் வெட்டுக்கு சுவிஸ் நாட்டிலிருந்து உத்தரவு – பொலிசார் விளக்கம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் அவரது தாய் மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம்(30) கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் மீது மேற்கொள்ளப்பட்ட வெட்டு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார் தாக்குதலாளிகளின் இலக்கு தவறியுள்ளதாகவும் அவர்கள் தாக்க வந்த ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com