93 தொகுதிகளுக்குமான வேட்புமனு கோரல் முடிவடைந்தது – அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்

2018 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான 93 உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய வேட்பு மனுக்களை ஏற்றுக்கும் நடவடிக்கை பூர்த்தியடைந்துள்ளது.
இன்று பிற்பகல் 1.30 வரை எதிர்ப்புக்களையும், முறையீடுகளையும் தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்து.

முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு இரண்டு கட்டங்களாக வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 93 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 557 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட காலப்பகுதியிலும், அதன் பின்னரும் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிசார் அறிவித்துள்ளனர். இந்த 93 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான 10 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியேட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏனைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. 21 ஆம் திகதி பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இந்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டபின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்படும்.

இரண்டு கட்டங்களாக பொறுப்பேற்கப்பட்டபோதிலும் தேர்தல் ஒரேநேரத்திலேயே நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com