9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் !!

9 மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைத் துணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஓரே தினத்தில் நடத்துவதற்கு ஏற்ற வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் அது தொடர்பான விதப்புரைகளைத் திருத்தம் செய்வதற்குத் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவை துணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com